ஆங்கில புத்தாண்டையொட்டி போக்குவரத்துக்கு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை

பெரம்பலூர், டிச. 31: இன்று (31ம் தேதி) 2020ம் ஆண்டின் கடைசி நாளாகும். நாளை 2021ம் ஆண்டு பிறக்கவுள்ளது. புத்தாண்டை மகிழ்ச்சியுடன் பக்தியுடன் தொடங்க புத்தாண்டை வரவேற்க கோயில்களில், தேவாலயங்களில் இன்று (31ம் தேதி) நள்ளிரவு சிறப்பு பூஜை, வழிபாடு நடத்தப்படுவதுண்டு.  இந்நிலையில் புத்தாண்டை வரவேற்று இரவு நேரங்களில் 12 மணிக்கு முன்பாக கண் முன் காணும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து அன்பை பரிமாறி கொள்வார்.

இந்த சூழலில் வலிய சென்று சிலர் வாழ்த்துக்களை தெரிவிப்பதால் தெருக்களில் பைக் சைடு ஸ்டாண்டுகளை தரையில் உரசி நெருப்புப்பொறி பறக்க சாலைகளில் சத்தமிட்டபடி செல்வதால் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

புத்தாண்டை எதிர்கொண்டு இன்றிரவு பெரம்பலூர் நகரில் அளவுக்கு அதிகமான வேகத்தில் பைக்குகளில் வலம் வருவதற்கு அனுமதி கிடையாது. வாகன போக்குவரத்துக்கோ, பொதுமக்களுக்கோ, பக்தர்களுக்கோ இடையூறாக இரவு நேரத்தில் பைக்குகளில் அதிவேகமாக சுற்றி திரிந்தபடி கூச்சலிட்டவாறு பைக்ரேஸ் நடத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வழிபாட்டு தலங்களுக்கு செல்வோருக்கு எந்தவித இடையூறும் செய்யக்கூடாது. மது அருந்தி விட்டு தெருக்களில் புத்தாண்டு கொண்டாட்டம் என்கிற பெயரில் ரகளை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை சாபில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>