சத்துணவு பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி

ஜெயங்கொண்டம், டிச. 31: ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாவட்ட அளவில் சத்துணவு பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி நடந்தது. ஒன்றிய ஆணையர் சந்தானம் தலைமை வகித்தார். பயிற்சியில் உணவு பாதுகாப்பு குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் சசிகுமார், உணவு தயாரிக்கும் முறை குறித்து சமையல் நிபுணர் பாரதி, சமையல் கூடம் சுகாதாரம் குறித்து டாக்டர் மேனகா ஆகியோர் பயிற்சி அளித்தனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்குமார், தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்தாஸ், அங்கன்வாடி வட்டார அலுவலர் ஆகியோர் சத்துணவு திட்டம் செயல் நோக்கம் குறித்து பயிற்சி அளித்தனர். பயிற்சியில் ஜெயங்கொண்டம், செந்துறை, தா.பழூர், அரியலூர் உள்ளிட்ட ஒன்றியங்களில் இருந்து 50 பேர் பங்கேற்றனர். பின்னர் பயிற்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழை கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஆறுமுகம் வழங்கினார்.

Related Stories:

>