தொழிற்சங்க விரோத போக்கை கைவிட கோரி நெடுஞ்சாலைத்துறை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்,டிச.31: ெதாழிற்சங்க விரோதப்போக்கினை கைவிட பெரம்பலூரில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிற்சங்க விரோதப் போக்கினைக் கைவிட வேண்டும். இந்திய அரசியல் சாசனம் வகுத்துள்ள சட்ட விதிகளை மீறக்கூடாது. தொழிற்சங்க கூட்டு பேர உரிமையை புறந்தள்ளக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறு த்தியும், சாலைப் பணியாளர்களுக்கு எதிராக செயல்படும் நெடுஞ்சாலைத்து றையின் முதன்மை இயக்குனர் மற்றும் தலைமைப்பொறியாளர் ஆகியோரை கண்டித்து, பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத் திற்கு, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்க மாவட்ட தலைவர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். மாநில செயற்குழுஉறுப்பினர் ரஜினி, துணைத்தலைவர்கள் பழனிசாமி, முத்து, கோட்ட இணைச் செயலாளர் ராஜா, ராமநாயகம் ஆகியோர் முன்னிலை வகித் தனர். கோட்டச் செயலாளர் சுப்ரமணியன் விளக்கவுரையாற்றினார். மாநிலச்செ யலாளர் மகேந்திரன் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச்செயலாளர் குமரிஅனந்தன், தமிழ்நாடு அரசுஅனைத்து மருந்தாளுநர் சங்க மாநில தணிக்கையாளர் ராஜராஜன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட அமைப்பாளர் சின்னசாமி ஆகியோர் பேசினர். முடிவில் கோட்ட பொருளாளர் கருணாநிதி நன்றி கூறினார். இதில் 30க்கும் மேற்பட்ட சாலைப்பணியாளர்கள் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை,சங்கக் கொடிகளை கையில் ஏந்தி ஆர்ப்பாட்ட முழக்கமிட்டனர்.

Related Stories:

>