70 பெண்கள் பங்கேற்பு ஜெயங்கொண்டம் அரசு கலை கல்லூரியில் அதிகாரிகள் குழு ஆய்வு

ஜெயங்கொண்டம், டிச.31: ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் கல்லூரியில் மண்டல இணை இயக்குநர் ஆய்வு செய்தார். அரியலூர் மாவட்டத்தில் புதிதாக துவங்கப்பட்ட ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த சில மாதங்களுக்கு முன் 260 மாணவ, மாணவிகளை கொண்டு துவங்கப்பட்டது இக்கல்லூரியை தஞ்சை மண்டல இணை இயக்குனர் உஷா தலைமையிலான பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு குழுவினர் பேராசிரியர்கள் திருமுருகன், அஜ்மல் கான், சார்லஸ்,சுவாமிநாதன், தாமஸ் பியூலா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது கல்லூரியின் கட்டமைப்பு, வகுப்பறைகள், பாடத்திட்டம், ஆசிரியர்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அதற்கு தக்கவாறு மாணவ-மாணவிகளின் எண்ணிக்கையை உறுதிப்படுத்துவதற்கான ஆய்வு நடைபெற்றது. ஆய்வின்போது கல்லூரி முதல்வர் (பொ) ராஜமூர்த்தி மற்றும் பேராசிரியர்கள் கோடித்துரை, அன்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>