நாகை நீலாயதாட்சி அம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

நாகை, டிச.31: நாகை நீலாயதாட்சி அம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாகை நீலாயதாட்சி அம்மன் கோயில் சப்தவிடங்கத்தலங்களில் ஒன்றாகும். இந்த கோயிலில் நேற்று மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு நடராஜர், சிவகாம சுந்தரிக்கு மஞ்சள், திரவியம், பச்சரிசி மாப்பொடி, கரும்புச்சாறு, பால்,தயிர், இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இதைத் தொடர்ந்து நேற்று அதிகாலையில் சப்த விடங்களில் ஒன்றான சுந்தரவிடங்க தியாகராஜர் நீலோத்ம்பாளுக்கு 108 கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு மகா பூர்ணாகுதி நடந்தது. பின்னர் சுவாமிக்கு விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யபட்டு வண்ண மலர்கள் மற்றும் பட்டு சாற்றி அலங்கரிக்கப்பட்டது. வலது கால் பாத தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories:

>