நாகை மாவட்டத்தில் தங்கும் விடுதி, உணவகங்களில் புத்தாண்டு கொண்டாட தடை கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதியில்லை

நாகை,டிச.31: ஊரடங்கு உத்தரவின் காரணமாக நாகை மாவட்டத்தில் உள்ள கடற்கரைகளில் இன்றும், நாளையும் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பிரவீன்பிநாயர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் இது போன்ற இதர இடங்களில் இன்று (31ம் தேதி) இரவு நடத்தப்படும் ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களில் அதிக அளவில் பொதுமக்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது. மேலும் கடற்கரைகளில் அதிக அளவில் பொதுமக்கள் கூட வாய்ப்புள்ளது. மேலும் சில வெளிநாடுகளில் கொரோனா நோய் தொற்று மீண்டும் பரவி வருகிறது. எனவே தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டியது உள்ளது. எனவே உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் வழக்கம் போல் செயல்படும். இன்று இரவு நடத்தப்படும் ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டம் கிடையாது. எனவே இன்று(31ம் தேதி), நாளை(1ம் தேதி) ஆகிய இரண்டு நாட்கள் நாகை மாவட்டத்தில் உள்ள கடற்கரைகளில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>