×

ரேஷன் கடைகளில் தரமற்றதாக வழங்கல் கொண்டை கடலையை தரையில் கொட்டி பொதுமக்கள் போராட்டம்

காரைக்கால்,டிச.31: காரைக்கால் மாவட்டத்தில் ஜூலை மாதம் முதல் நவம்பர் மாதம் வரை ஐந்து மாதத்திற்கு வழங்க வேண்டிய ரேஷன் பொருட்களான கொண்டைக்கடலை மற்றும் துவரம் பருப்பு ஆகியவை அரசு ஊழியர்களை கொண்டு காரைக்கால் மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளிலும் வழங்கப்பட்டு வருகிறது.. ரேஷன் கார்டு ஒன்றுக்கு 4 கிலோ கொண்டைக் கடலையும், ஒரு கிலோ துவரம் பருப்பும் வழங்கப்படுகிறது. 44 மையங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு இது வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இவை தரமற்று இருப்பதாகவும் காய்ந்து கருகிய கொண்டைக் கடலைகளில் பூச்சி, புழுக்கள் இருப்பதாகவும், துவரம் பருப்பு மாவாக இருப்பதாகவும் அதனை கொடுக்கும் போதும் அதை கூட அளவில் குறைத்து கொடுப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட சேத்திலால் நகர் அரசு பள்ளி வளாகத்தில் வழங்கப்பட்ட கொண்டக் கடலை மற்றும் துவரம் பருப்புகளை வாங்கிய பொதுமக்கள் அதில் பூச்சி மற்றும் புழுக்கள் இருப்பதாகவும் கூறி பள்ளி வளாகத்தில் தரையில் கொட்டி அரசுக்கு கண்டனத்தை தெரிவித்தனர். தரமற்ற பொருட்களை வழங்குவதை நிறுத்தி கொண்டு அதற்கான பணத்தை வங்கி கணக்கில் போடுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : protest ,ration shops ,
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் தமிழ்நாடு விவசாயிகள் போராட்டம்..!!