வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

வேதாரண்யம்,டிச.31: வேதாரண்யத்தில் அமைந்துள்ளது புகழ் பெற்ற பழமை வாய்ந்த வேதாரண்யேஸ்வரர் கோயில். இந்த கோயிலில் வேதங்கள் பூஜை செய்து மூடிக்கிடந்த கதவை அப்பரும் சம்பந்தரும் தேவார பதிகங்கள் பாடி திறந்ததாக வரலாற்று சிறப்புடைய கோயில். அகஸ்திய மாமுனிவருக்கு சிவபெருமான் திருமணக்கோலத்தில் காட்சி தந்த இடம். இந்த சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு வேதாரண்யம் கோயிலில் உள்ள நடராஜர் மற்றும் சிவகாமி அம்மனுக்கும் வேதாரண்யம் கோயில் கட்டுப்பாட்டில் உள்ள மற்ற கோயில்களில் இருந்து பாதுகாப்பு கருதி இந்த கோயிலில் வைக்கப்பட்டு உள்ள 5 நடராஜர் மற்றும் சிவகாமி அம்மனுக்கும் கோயில் திட்டத்திலேயே சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. கொரோனோ தொற்று நோயை முன்னிட்டு சுவாமி புறப்பாடு வீதி உலா நடைபெறவில்லை. பக்தர்கள் விதிமுறைகளை கடைப்பிடித்து சுவாமியை வழிபட்டனர். இதுபோல் கோயிலில் உள்ள அம்ச நடன புவன விடங்க தியாகராஜர் சுவாமிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

Related Stories:

>