×

மறைமலைநகரில் பரபரப்பு: வட்டார வளர்ச்சி அதிகாரியை பாமகவினர் முற்றுகை: அலுவலக பணிகள் முற்றிலும் பாதிப்பு

செங்கல்பட்டு: காட்டாங்கொளத்தூர் ஒன்றிய பாமக சார்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு கொடுக்க நேற்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட பாமகவினர் வந்தனர். அதில், பாமக மாவட்ட துணை செயலாளர்கள் தேவராஜன், ராமகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர்  செல்வி, நகர செயலாளர் சரவணன். முன்னாள் ஒன்றிய குழு தலைவர் வாசு ஆகியோர் அலுவலகத்தின் உள்ளே மனு அளிக்க சென்றனர். அங்கு, வட்டார வளர்ச்சி அலுவலர் இல்லை. இதனால், ஆத்திரமடைந்த பாமகவினர், அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், சுமார் 3 மணி நேரத்துக்கு பின் வட்டார வளர்ச்சி அலுவலர் மாலதி அங்கு சென்றார். அவரை முற்றுகையிட்ட அவர்கள், மனு வாங்க மறுத்து அதிகாரிகள்  வெளியேறியதாகவும், போராட்டத்துக்கு பின் அலுவலகம் சென்று மனு வாங்குகிறீர் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்தபோதும், பாமகவிரை அதிகாரிகள் புறக்கணிக்கின்றனர். இது வன்மையாக கண்டிக்கதக்கது என்றனர். இதையடுத்து அவர்களது மனுவை கொடுத்துவிட்டு, கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால், வட்டார வளர்ச்சி அலுவலக பணிகள் பாதித்தன.

திருப்போரூர்: திருப்போரூர் பஸ் நிலையம் அருகில் இருந்து பாமக வினர் ஊர்வலமாக சென்று ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்போரூர் நகர செயலாளர் பாபு வரவேற்றார். செங்கல்பட்டு மத்திய மாவட்ட செயலாளர் காரணை ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் என்.எஸ்.ஏகாம்பரம், திருப்போரூர் ஒன்றிய செயலாளர்கள் அருண்குமார், கங்காதரன், ரோகித், கோதண்டன், மாவட்ட பொருளாளர் செல்வி கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட மகளிர் சங்க துணை செயலாளர் ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து திருப்போரூர் ஒன்றிய ஆணையாளர் வெங்கட்ராகவனிடம் 1000 மனுக்களை வழங்கினர். இதில் மாவட்ட மாணவர் அணி செயலாளர் சதாசிவம், கொள்கை பரப்பு செயலாளர் துரை பூபாலன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் கர்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுராந்தகம்: மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னதாக மதுராந்தகம் பஸ் நிலையத்தில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் பேரணியாக புறப்பட்டனர். பேரணியை பாமக மாநில அமைப்பு செயலாளர் செல்வகுமார் துவக்கி வைத்தார். தொடர்ந்து மாநில துணை பொது செயலாளர் பொன்.கங்காதரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர், தங்களது கோரிக்கை மனுக்களை மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலர் தண்டபாணியிடம் வழங்கினர்.

Tags : Regional Development Officer ,Maraimalai Nagar ,Pamakavinar ,
× RELATED சேலம் அருகே கோயிலில் சாமி...