×

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம்

காஞ்சிபுரம்: ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 127 சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம் நேற்று விமரிசையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியுடன் நடராஜரை வழிபட்டனர். தமிழகம் முழுவதும் உள்ள சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம் நேற்று நடந்தது. இதையெட்டி, ஏகாம்பர நாதர், கச்சபேஸ்வரர், வழக்கறுத்தீஸ்வரர், கைலாசநாதர், சிவகாமி சமேத நடராஜர், செட்டி தெருவில் உள்ள புண்ணியகோட்டீஸ்வரர், காமராஜர் வீதியில் உள்ள சித்தீஸ்வரர், முத்தீஸ்வரர், தவளேஸ்வரர், ருத்ரகோட்டீஸ்வரர், மணிகண்டேஸ்வரர், இறவாதீஸ்வரர், பிறவாதீஸ்வரர், நகரீஸ்வரர் மற்றும் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர், காந்தளீஸ்வரர், மாமல்லபுரம் மல்லீஸ்வரர்  என காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 127 சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம் விமரிசையாக நடந்தது.

அப்போது, நடராஜருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு நடராஜரை வழிப்பட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை அந்தந்த கோயில் செயல் அலுவலர்கள், விழா குழுவினர், நிர்வாகிகள் செய்தனர்.

Tags : Arutra Darshan ,temples ,district ,Shiva ,Kanchipuram ,
× RELATED திருச்சியில் 2 கோயில்களின் பூட்டை உடைத்து நகை திருட்டு