காங்கிரசார் ஏர் கலப்பை பேரணி

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து ஏர் கலப்பை பேரணி, ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் அருகில் நேற்று நடந்தது. இதில் புதிய 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோஷமிட்டனர். முன்னதாக ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையத்தில் இருந்து திருவள்ளூர் சாலையில் டிராக்டர், மாட்டு வண்டிகளில் ஏர் கலப்பையுடன் சென்ற பேரணிக்கு ஸ்ரீபெரும்புதூர் நகர தலைவர் அருள்ராஜ் தலைமை வகித்தார். எஸ்சி, எஸ்டி பிரிவு  மாநில தலைவர் செல்வபெருந்தகை, காஞ்சி வடக்கு மாவட்ட தலைவர் ருபி மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தனர்.

Related Stories:

>