×

ராஜபாளையத்தில் காங்கிரஸ் ஆண்டுவிழா

ராஜபாளையம், டிச. 31:  ராஜபாளையம் நேரு பவனத்தில் இந்திய தேசிய காங்கிரஸின் 136வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. மேற்கு மாவட்ட கமிட்டி தலைவர் தளவாய்பாண்டியன் தலைமை வகிக்க, மூத்த தலைவர் நாகரத்தினம் கட்சி கொடியேற்றினார். நகர் கமிட்டி தலைவர் சங்கர்கணேஷ் வரவேற்று, இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி ஏற்று கொண்டனர். இதில் தமிழ்நாடு ஐஎன்டியுசி பொருளாளர் பிரபாகரன், மாவட்ட பொது செயலாளர் செல்வராஜ், அலுவலக மேலாளர் வெங்கட்ராமராஜா, நிர்வாகிகள் ராஜாலிங்கராஜா, சக்திமோகன், குமாரசாமிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Congress Anniversary ,Rajapalayam ,
× RELATED ராஜபாளையம் ஏகேடி தர்மராஜா மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா