×

திருவில்லிபுத்தூரில் ஓடை தடுப்பு சுவர்களை அகற்ற கோரி ஆர்ப்பாட்டம்

திருவில்லிபுத்தூர், டிச. 31: திருவில்லிபுத்தூர்- மதுரை சாலையில் அமைந்துள்ளது வடமலைக்குறிச்சி கண்மாய். மிகப்பெரிய கண்மயான இது நிரம்பினால் 500க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயன்பெறும். மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பெய்யும் போது குறிப்பாக ரெங்கர் கோயில், திருவண்ணாமலை சின்னக்கல், வெள்ளக்கல் ஆகிய 3 ஓடைகளில் இருந்தும் தண்ணீர் வந்து இக்கண்மாயை நிரப்பும். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக பரவலாக மழை பெய்ததாலும், ஓடைகளில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளதாலும் குறைவான தண்ணீரே வந்து கண்மாய் நிரம்பாத நிலை உள்ளது. எனவே வடமலைக்குறிச்சி கண்மாய்க்கு தண்ணீர் வரும் ஓடைகளில் உள்ள தடுப்பு சுவர்களை அகற்ற வேண்டும்,  நீர்வரத்து பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், பேயன் ஆற்றுப்படுகையில் கண்மாய்க்கு 121 கன அடி தண்ணீரை பகிர்ந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் காமராஜர் சிலை அருகே நேற்று பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ஜெயக்குமார், திருப்பதி, பழனி குமார், சுந்தரம், பெருமாள் மற்றும் பாசன விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.


Tags : Demonstration ,removal ,Srivilliputhur ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...