×

அருப்புக்கோட்டையில் மக்கள் சபை கூட்டம்

அருப்புக்கோட்டை, டிச. 31: அருப்புக்கோட்டை நகர திமுக சார்பில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் மக்கள் சபை கூட்டம் மதுரை ரோடு நெசவாளர் காலனி, அன்புநகரில் நடந்தது. முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவப்பிரகாசம் தலைமை வகிக்க, நகர செயலாளர் மணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில் மாநில நெசவாளர் அணி செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் பாபுஜி, ஆதிதிராவிட அணி அமைப்பாளர் சோலையப்பன், முன்னாள் மாவட்ட பொருளாளர் கந்தசாமி, சிறுபான்மை பிரிவு மைதீன் பாட்ஷா, முன்னாள் கவுன்சிலர் ராஜராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : meeting ,People's Council ,Aruppukottai ,
× RELATED காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது...