விருதுநகர் அருகே பெண் ஊராட்சி தலைவரை தரையில் அமர வைப்பதாக புகார் கலெக்டரிடம் மனு

விருதுநகர், டிச. 31: விருதுநகர் அருகே தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தததால் தன்னை தரையில் அமர வைப்பதாக கூறி பெண் ஊராட்சி தலைவர் கலெக்டரிடம் புகார் மனு அளித்தார். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று குருமூர்த்தி நாயக்கன்பட்டி ஊராட்சி தலைவர் முத்துலட்சுமி மனு அளித்து விட்டு கூறுகையில், குருமூர்த்தி நாயக்கன்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்ணாக தேர்வு செய்யப்பட்டேன். ஊராட்சி துணை தலைவர் காவல்துறையில் வேலை செய்து வெளியேறிய வரதராஜன் மேல் சாதியை சேர்ந்தவராக இருக்கிறார். தலைவருக்கான சேரில் அமர்ந்து கொண்டு துணை தலைவர் நிர்வாகம் செய்கிறார். தலைவரான நான் அலுவலகம் சென்றால் இடம் இல்லை என தரையில் உட்கார வைக்கிறார். ஊராட்சி கட்டிடத்திற்கு வெளியேதான் இருக்க வேண்டுமென இழிவுபடுத்துகிறார். துணை தலைவர் சொல்வதை தான் கேட்க வேண்டும். ஊரில் நடக்கும் அனைத்து பணிகளையும் அவரை கேட்டுதான் செய்ய வேண்டும். செக்கில் மட்டும் கையெழுத்து போட்டு விட்டு சென்று விடு என மிரட்டுகிறார். ஊராட்சியின் 6 உறுப்பினர்களையும் தன் பக்கம் வைத்து கொண்டு பணிகளை செய்ய விடாமல் தடுக்கிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories:

>