ஆட்டோ ஸ்டாண்ட் அமைக்க எதிர்ப்பு கெங்குவார்பட்டி மக்கள் மறியல்

தேவதானப்பட்டி, டிச.31: கெங்குவார்பட்டியில் ஆட்டோ ஸ்டாண்ட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டியில் ஊராட்சி ஒன்றிய  துவக்கப்பள்ளி அருகே பஸ் ஸ்டாப் உள்ளது. இந்த இடத்தில் ஆட்டோ ஸ்டாண்ட் இருந்தது. ஆட்டோ ஸ்டாண்டை அகற்ற கோரி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் அந்த இடத்தில் ஆட்டோ ஸ்டாண்ட் அமைக்க இருப்பதாக தெரிகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேவதானப்பட்டி போலீசார் மற்றும் பெரியகுளம் டிஎஸ்பி முத்துக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஜனவரி முதல்  வாரத்தில் பெரியகுளம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் கெங்குவார்பட்டி-வத்தலக்குண்டு சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

Related Stories:

>