×

ஒரேநாளில் 26 ஆயிரம் கிலோ ஏலக்காய் விற்றது

போடி, டிச.31: போடி ஸ்பைஸஸ் போர்டில் நேற்று ஒரே நாளில் 26 ஆயிரம் கிலோ ஏலக்காய் விற்பனையானது. போடி மூணாறு சாலையில் உள்ள ஸ்பைஸல் போர்டில் ஏலக்காய் ஏலம் நடந்து வருகிறது. நேற்று சிஜிஎப் பிரைவேட் லிமிடெட் சார்பில் 28 ஆயிரம் கிலோ  ஏலக்காய் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. தமிழக மற்றும் கேரள வியாபாரிகள் இணையதளத்தில் நடந்த ஏலத்தில் ஒரே நாளில் 26 ஆயிரம் கிலோ விற்று தீர்ந்தது . பொங்கல் திருநாளை ஒட்டி ஏலக்காயின் தேவை அதிகரித்திருப்பதால் விலையும் தற்போது படிப்படியாக  உயர்ந்து வருகிறது. அதன்படி ஒரு கிலோ ஏலக்காய் சராசரி விலை ரூ.1774, உயர்ந்தபட்ச விலை ரூ.2021 என நேற்று ஏலத்தில் எடுக்கப்பட்டது. கொரோனாவால் ஏலக்காய் விலை சரிந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். தற்போது தளர்வுக்கு பின் சரிந்து கிடந்த விலை உயர்த்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...