ஆருத்ரா தரிசன வீதியுலா

தொண்டி, டிச.31: ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அனைத்து சிவ ஆலயங்களிலும் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொண்டி சிதம்பரேஸ்வரர் சிவகாமி ஆலயத்தில் சாமிக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 12 வகை அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து பல்லக்கில் சாமி கோவிலை சுற்றிலும் வீதி உலா நடைபெற்றது. இதேபோல் தீர்த்தாண்டதானம் சர்வதீர்த்தேஸ்வரர் ஆலயத்திலும், நம்புதாளை நம்பு ஈஸ்வரர் சமேத அன்னபூரணி ஆலயத்திலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories:

>