×

பரமக்குடி நகரில் அதிமுக பாசறை நிர்வாகிகளுக்கு புத்தாடை எம்எல்ஏ வழங்கினார்

பரமக்குடி, டிச.31:  பரமக்குடி நகர் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, பாசறை நிர்வாகிகளுக்கு புத்தாடைகளை பரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் வழங்கினார்.
பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பரமக்குடி நகர், பரமக்குடி,  நயினார்கோவில்,போகலூர், கமுதி ஒன்றிங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகளுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து, பரமக்குடி நகர் 33,34,35,36 வார்டுகளில் உள்ள  இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் முனியசாமி தலைமை தாங்கினார். நகர் செயலாளர் கணேசன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளர் தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாசறை நகர் செயலாளர் செந்தில்குமார்  வரவேற்றனர். பரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு புத்தாடை வழங்கினார். இதில் ஒன்றிய கவுன்சிலர் சுப்ரமணியன், நகர அம்மா பேரவை இணை செயலாளர் கார்த்திக், தகவல் தொழில்நுட்ப பிரிவு நகர செயலாளர் தினேஷ், மாவட்ட மாணவரணி பொருளாளர் யோக மணிகண்டன் மற்றும் ஒன்றிய மாணவரணி பொருளாளர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Puttaparthi MLA ,AIADMK ,Paramakudi ,
× RELATED பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி...