பால் வியாபாரி வெட்டி படுகொலை பாலமேடு அருகே பயங்கரம்

அலங்காநல்லூர், டிச. 31: மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள எர்ரம்பட்டி கிராமத்தை சேர்ந்த பிச்சைமணி (32). பால் வியாபாரியான இவருக்கு பிருந்தா என்ற மனைவியும், 2 பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளன.

நேற்று அதிகாலை வழக்கம் போல் பால் கறப்பதற் டூவீலரில் பிச்சைமணி சென்றுள்ளார். தெற்குத் தெரு வளைவு பகுதியில் மறைந்திருந்த மர்மநபர்கள் பிச்சைமணியை வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இச்சம்பவம் குறித்த தகவலறிந்த பாலமேடு இன்ஸ்பெக்டர் நடேசன் தலைமையிலான போலீசார், பிச்சைமணி உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்த இடத்தை எஸ்.பி சுஜித்குமார், டிஎஸ்பி.ஆனந்த ஆரோக்கியராஜ் நேரில் ஆய்வு செய்தனர். கொலைக்கு முன்விரோதம் காரணமா அல்லது வேறு காரணமா என போலீசார்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.   

Related Stories:

>