- Kengavalli
- செல்வராஜ்
- தெடவூர்
- அகிலன்
- கிருஷ்ணன்
- கிருஷ்ணவேணி
- கர்தலகுறிச்சி
- சின்னசேலம், கள்ளக்குறிச்சி மாவட்டம்
- பி.காம் 2வது
- தலைவாசல்
கெங்கவல்லி, அக்.29: கெங்கவல்லி அருகே தெடாவூரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் அகிலன் (26), டிரைவராக பணியாற்றி வருகிறார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் கருத்தலக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகள் கிருஷ்ணவேணி (19). தலைவாசலில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், உறவினர் விசேஷத்திற்கு வந்த போது, அகிலனுக்கும், கிருஷ்ணவேணிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இது குறித்து பெற்றோருக்கு தெரிய வந்தது. இதனால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காதலர்கள் இருவரும் வீட்ைட விட்டு, நேற்று முன்தினம் வெளியேறி நேற்று வீரகனூர் சிவன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், பாதுகாப்பு கேட்டு கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தனர். இன்ஸ்பெக்டர் சாந்தி, இருதரப்பு பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, காதல் ஜோடியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
