×

சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

மதுரை, டிச. 31: சாலையோர வியாபாரிகள் சங்கம் மற்றும் மாநகராட்சி துப்புரவு பணியாளர் சங்கம் ஆகியவை இணைந்து மதுரையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தின. சாலையோர வியாபாரிகள் சங்கத்தலைவர் மோகன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் சந்தியாகு முன்னிலை வகித்தார். மாநகராட்சி துப்புரவு பணியாளர் சங்க பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் கண்டன உரையாற்றினார். புதுடெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் பாண்டி நன்றி கூறினார்.

Tags : Roadside vendors ,
× RELATED 11.8 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக...