×

41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக்க வேண்டும் பழநி சாலை பணியாளர் மாநாட்டில் கோரிக்கை

பழநி, டிச. 31: பழநியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைததுறை சாலை பணியாளர் சங்கத்தின் 1வது கோட்ட மாநாடு நடந்தது. கோட்ட தலைவர் நந்தகோபால் தலைமை வகிக்க, இணை செயலாளர் பாலமுருகன் வரவேற்று பேசினார். மாநில செயலாளர் ராஜமாணிக்கம் சிறப்புரையாற்ற, கோட்ட செயலாளர் மணிமாறன் அறிக்கை வாசித்தார். மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. தொடர்ந்து மாநாட்டில் நெடுஞ்சாலைத்துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் அரசின் முடிவை கைவிட வேண்டும். 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக வரன்முறைபடுத்திட வேண்டும். இறந்த சாலை பணியாளர்களின் வாரிசு குடும்பங்களுக்கு விதிகளை தளர்த்தி வாரிசுப்பணி வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் ஆபத்தான பணி என்பதால் ஆபத்துப்படி 10% வழங்க வேண்டும். சாலை பணியாளர்களில் தகுதி வாய்ந்தவர்களுக்கு பதிவுறு எழுத்தர், இளநிலை உதவியாளர், வரைவாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்களின் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். ஊதியக்குழுவின் 21 மாத கால நிலுவை தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Palani Road Employees Conference ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ