திண்டுக்கல் அருகே விபத்தில் படுகாயமடைந்த தம்பதியை மீட்க வராத ‘108’ பொதுமக்கள் அதிருப்தி

திண்டுக்கல், டிச. 31: மதுரை- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று கர்நாடகாவில் இருந்து நெல்லைக்கு கார் வந்து கொண்டிருந்தது. திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே கார் வந்த போது முன்னால் டூவீலரில் சென்ற கோபால்பட்டி மேட்டுகடையை சேர்ந்த ஆறுமுகம் (52) என்பவர் தனது டூவீலரை வந்த வழியிலே திருப்பினார். இதனால் கார் டூவீலர் மீது மோதியது. இதில் ஆறுமுகம், அவரது மனைவி கலா படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். உடனே அங்கிருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தனர். ஆனால் ஒரு மணிநேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் அங்கு வந்த போலீசார் உடனடியாக இருவரையும் அவ்வழியே சிமெண்ட் மூடை ஏற்றி வந்த வேனில் ஏற்றி திண்டுக்கல் ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர். இதில் ஆறுமுகம் மேல்சிகிச்சைக்காக மதுரை ஜிஹெச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடைசி வரை ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வராததால் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.

Related Stories:

>