×

ஒட்டன்சத்திரம் மின்மயானத்திற்கு புதிய ஆம்புலன்ஸ் சேவை தேவை

ஒட்டன்சத்திரம், டிச. 31: ஒட்டன்சத்திரம் மின்மயானத்திற்கு புதிய ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒட்டன்சத்திரத்தில் நகராட்சி சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நவீன எரிவாயு மயானம் காவேரியம்மாபட்டி செல்லும் புறவழிச்சாலையில் கடந்த 2010ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த மின்மாயனம் ஆரம்பித்த 3 ஆண்டுகளாக நகராட்சி சார்பில் ஆம்புலன்ஸ் சேவை இருந்தது. அதன்பின் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இலவசமாக ஆம்புலன்ஸ் சேவை கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த ஆம்புலன்ஸ் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதாகி, துருப்பிடித்த நிலையில் செயலற்று கிடக்கிறது. இதனால் ஒட்டன்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய கொண்டு வர தனியார் ஆம்புலன்சை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மின்மயானத்தில் தகனம் செய்யும் செலவு ரூ.1000 என்றாலும், ஆம்புலன்ஸ் வாடகை ரூ.3000 முதல் ரூ.5000 வரை உள்ளது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே ஒட்டன்சத்திரம் நகராட்சி நிர்வாகம் மின்மயானத்திற்கு இலவசமாக புதிய ஆம்புலன்ஸ் சேவையை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Ottansathram ,power plant ,
× RELATED கூடங்குளம் முதலாவது அணுமின்...