திண்டுக்கல்லில் திமுக வழக்கறிஞரணி ஆலோசனை கூட்டம்

திண்டுக்கல், டிச. 31: சென்னையில் வரும் ஜன.10ம் தேதி வழக்கறிஞர் அணி மாநாடு நடைபெறவுள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் காமாட்சி தலைமை வகிக்க, மாவட்ட அவைத்தலைவர் பசீர் அகமது, மாவட்ட துணை செயலாளர் நாகராஜன், நகர செயலாளர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான ஐ.பி.செந்தில்குமார் கலந்து கொண்டு கழகத்தை வலுப்படுத்த வழக்கறிஞர் அணியை சேர்ந்த அனைவரும் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன், துணை அமைப்பாளர் சூசை ராபர்ட் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>