×

கொடைக்கானலில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது கார் டாக்டர் உயிர் தப்பினார்

கொடைக்கானல், டிச. 31: கொடைக்கானலில் 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக டாக்டர் உயிர் தப்பினார். தேனி மாவட்டம், பெரியகுளம் தாமரை குளத்தை சேர்ந்தவர் அப்துல்ரகுமான். கால்நடை துறை மருத்துவர். இவர் நேற்று காலை கொடைக்கானலுக்கு பணி நிமித்தமாக காரில் வந்துள்ளார். பெருமாள்மலை அருகே வந்த போது திடீரென காரின் முன்சக்கரம் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் மலைச்சாலையில் சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அப்துல்ரகுமான் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்தை கண்டதும் அருகில் இருந்தவர்கள் உடனே அவரை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : car doctor ,Kodaikanal ,
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்