பட்டிவீரன்பட்டியில் அனுமதியின்றி சிலை வைக்க முயற்சி போலீசார் தடுத்து நிறுத்தினர்

பட்டிவீரன்பட்டி, டிச. 31: பட்டிவீரன்பட்டி ரேடியோ மைதானத்தில் அண்ணா மன்றம் அருகே நேற்று அனுமதியின்றி சிலை வைப்பதற்காக பள்ளம் தோண்டி வேலைகள் நடந்தன. இதுகுறித்து தகவலறிந்ததும் பட்டிவீரன்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து உரிய அனுமதியின்றி சிலை வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர். இதையடுத்து சிலை வைக்க முயன்றவர்கள் பணிகளை கைவிட்டனர். தொடர்ந்து போலீசார், வருவாய்த்துறையினர் முன்னிலையில் தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டது.

Related Stories:

>