×

அணை கட்ட நிலம் கொடுத்தவர்களின் வாழ்க்கையை அரசு சிதைத்துவிட்டது

மேட்டூர், டிச.30: மேட்டூர் அருகே கோனூர் கிராமம் திப்பம்பட்டி பகுதியில் உள்ள மக்களை, திரைப்பட இயக்குனர் கவுதமன் நேற்று சந்தித்தார். சரபங்கா நீரேற்ற திட்டத்திற்கு குழாய் பதிக்க குழி தேண்டுவதற்கு வெடிவைத்தபோது சேதம் அடைந்த வீடுகளை பார்வையிட்டார். அப்பகுதியில் விளை நிலம் மற்றும் வீடுகளை இழந்த விவசாயிகள் கிராமக்களிடம் குவைகளை கேட்டு, மனுக்களை பெற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மேட்டூர் அணை தமிழ் நாட்டிற்கே தண்ணீர் கொடுக்கும் தாய் மடி. அணை கட்டுவதற்கு கோனூர் கிராமத்தில் திப்பம்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் நிலம் கொடுத்துள்ளனர். அந்த மக்கள் இப்போது வசிக்கும் வீடுகளுக்கு பட்டா இல்லாமல், தனித்து விடப்பட்டு அகதிகள் போல வாழ்கின்றனர். தமிழக அரசு இவர்களின் வாழ்க்கையை சிதைத்து விட்டது. அவர்களிடம் மீதம் உள்ள நிலத்தையும், தமிழக அரசு பறித்து சரபங்கா நீரேற்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த திட்டம் சரியான திட்டம். ஆனால் இடம் கொடுத்த மக்களுக்கு தண்ணீர் இல்லாமல் கொண்டு செல்வது ஏற்க முடியாது. நிலம் கொடுத்த மக்களுக்கும் குடிக்க தண்ணீர், விவசாயத்திற்கு தண்ணீர், குடும்பத்திற்கு ஒருவருக்கு வேலை கொடுக்க வேண்டும். படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனை மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் சென்று வர பேருந்து வசதி செய்து தரவேண்டும். இந்த கோரிக்கைகளை தேர்தலுக்கு முன்பாக, தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். தவறினால் மக்களை திரட்டி பெரும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : government ,dam ,land ,
× RELATED பைக்காரா அணையின் நீர்மட்டம் சரிவு ; படகு சவாரிக்கு 100 படிகள் இறங்க வேண்டும்