×

மினி கிளினிக் திறப்பு விழா

அயோத்தியாப்பட்டணம், டிச.30: அயோத்தியாப்பட்டணம் அடுத்த பெரியகவுண்டாபுரம் ஊராட்சி நொச்சிப்பட்டியில், அம்மா மினி கிளினிக்கை தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் துவக்கி வைத்தார். தொடர்ந்து அரசு பஸ் வசதியை தொடங்கி வைத்தார்.

மேலும், மகளிர் இருசக்கர வாகன மானியம், பயிர் கடன், கறவை மாட்டுக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் உள்ளிட்ட பல்வேறு நல திட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில், ஏற்காடு எம்எல்ஏ சித்ரா, சேலம் மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர், தெற்கு ஒன்றிய செயலாளர் மெடிக்கல் ராஜா, ஒன்றிய குழு தலைவர் பார்வதி மணி, வடக்கு ஒன்றிய செயலாளர் மணி, ஒன்றியக்குழு உறுப்பினர் சந்திரகலா, சுகாதாரத்துறை துணை இயக்குனர் செல்வகுமார், போக்குவரத்து துறை மண்டல இயக்குனர் ரமேஷ், கூட்டுறவு வங்கி தலைவர்கள் அருண், முத்துசாமி, பொன்.தனபாலன், பேரூர் செயலாளர் ரவிசேகர், எம்ஜிஆர் மன்ற ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஹரி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Mini Clinic Opening Ceremony ,
× RELATED மினி கிளினிக் திறப்பு விழா