புத்தாண்டு கொண்டாட தடை விதிப்பு

ஏற்காடு, டிச.30: ஏற்காடு தமிழகத்தின் பிரதான சுற்றுலா தலம் என்பதால், சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மக்கள் ஏற்காட்டிற்கு வருகை தந்து புத்தாண்டை கொண்டாடுவர். அது மட்டுமின்றி ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகளில், சுற்றுலா பயணியருக்கு புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.

இந்நிலையில் கொரோனா தொற்றின் காரணமாகவும், புதிய வகை கொரோனா பரவ வாய்ப்புள்ளதாக சுகாதார துறை தெரிவித்துல்லதால், ஏற்காட்டில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாடவும், தங்கும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கும், தங்கும் விடுதியில் தங்கியுள்ள நபர்கள், இரவு 9மணிக்கு மேல் பொது இடங்களில் கூடுவதற்கும், ஏற்காடு இன்ஸ்ெபக்டர் ஆனந்தன் தடை விதித்துள்ளனர். மீறும் பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இது குறித்த துண்டு பிரசுரங்களையும், தங்கும் விடுதிகளுக்கும் பொதுமக்களுக்கும் விநியோகித்தனர்.

Related Stories:

>