தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பிறந்தநாள் விழா

சூரமங்கலம், டிச.30: தமாகா தலைவர் ஜி.கே.வாசனின் 56வது பிறந்தநாளையொட்டி சேலத்தில் தமாகா மாநில செயலாளர் வக்கீல் செல்வம் தலைமையில் அஸ்தம்பட்டியில் உள்ள சிஎஸ்ஐ பாலர் ஞான இல்லத்தில் உள்ள மன வளர்ச்சி குன்றிய மாணவ, மாணவியர்களுக்கு காலை விருந்தும், இனிப்பும் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு, பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

விழாவில் மாநில பொதுச்செயலாளர் எம்.பி.எஸ்.குலோத்துங்கன், இளைஞரணி பொது செயலாளர் ரகுநந்தகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பள்ளி குழந்தைகளுக்கு நல உதவிகளை வழங்கினர்.  மாநில இணை செயலாளர் சின்னதுரை, தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். விழாவில் மாநில சிறப்பு அழைப்பாளர்கள் அசோகமித்திரன், மகளிரணி மாநில துணை தலைவி சிந்தாமணி அம்மாள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வைத்திலிங்கம், கிருஷ்ணன், பொறியாளர் ரவிசங்கர், மத்திய மாவட்ட தமாகா துணைத்தலைவர் கோபாலன், கிழக்கு மாவட்ட செயலாளர் முனுசாமி, அஸ்தம்பட்டி மண்டல காசிராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொன்டனர்.

Related Stories:

>