ஏற்காட்டில் சித்த மருத்துவ முகாம்

ஏற்காடு, டிச.30: ஏற்காடு படகு இல்லத்தில், சுகாதரத்துறை சார்பில் சித்த மருத்தவ முகாம் நேற்று நடந்தது. ஏற்காடு எம்எல்ஏ சித்ரா தலைமை வகித்து தொடங்கி வைத்தார். ஏற்காடு யூனியன் சேர்மேன் சாந்தவள்ளி அண்ணாதுரை, ஏற்காடு ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் தாம்சன் மற்றும் சித்த மருத்துவ அலுவலர் குமார் ஆகியோர் சித்த மருத்துவத்தின் நன்மைகள் குறித்து விளக்கி கூறினர். முகாமில் 450பேருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

Related Stories:

>