×

குமாரபாளையத்தில் கோயில் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி

குமாரபாளையம், டிச.31: குமாரபாளையம் காவேரிநகர் புதிய பாலம் அருகே, லட்சுமிநாராயணா கோயிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில், இறைச்சி கடைகள் அத்துமீறி செயல்படுவதாக புகார் எழுந்ததையடுத்து, போலீசார் தலையிட்டு கறிக்கடைகளை அகற்றினர். இந்நிலையில், பராமரிப்பின்றி கிடந்த கோயில் நிலத்தில், விளையாட்டு மைதானம் அமைப்பதாக கூறி ஒரு தரப்பினர், பொக்லைன் மூலம் அங்கிருந்த மரம், செடிகளை அகற்றி சமன்படுத்தும் முயற்சியில் இறங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விஎச்பி அமைப்பினர், கோயில் நிலத்தை ஆக்கிரமிக்கும் முயற்சி எனக்கூறி, நாமக்கல் இந்து அறநிலையத்துறை துணை ஆணையர் தமிழரசனிடம் புகார் அளித்தனர்.

புகாரின் மீது நடவடிக்கை எடுக்க துணை ஆணையர், குமாரபாளையம் அறநிலையத்துறை செயல் அலுவலர் சிவகாமிக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, சம்பவ இடம் சென்ற செயல் அலுவலர் சிவகாமி, கோயில் நிலத்தை சமன்படுத்தும் பணியில் ஈடுபட்டவர்களை, உடனடியாக வெளியேறும்படி உத்தரவிட்டார். தொடர்ந்து, குமாரபாளையம் போலீசில் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் அத்துமீறி புகுந்து ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகாரளித்தார்.

Tags : temple land ,Kumarapalayam ,
× RELATED ஈரோடு கிழக்கு, மேற்கு சட்டமன்ற தொகுதிகளில் குறைந்தளவு வாக்குப்பதிவு