×

குமாரபாளையம், பள்ளிபாளையத்தில் திமுக சார்பில் மக்கள் கிராமசபை கூட்டம்

குமாரபாளையம், டிச.31: குமாரபாளையத்தில் அம்மன் நகர் பகுதியில், திமுக சார்பில் மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொதுமக்களிடம், அதிமுக ஆட்சியின் விலைவாசி உயர்வு, விசைத்தறி, சாயப்பட்டறை உள்ளிட்ட தொழில்களின் வீழ்ச்சி நிலை குறித்து திமுக நிர்வாகிகள் விளக்கி பேசினர். பின்னர், அதே பகுதியில் வீடு, வீடாக சென்று, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை சந்தித்து துண்டுபிரசுரங்களை வழங்கினர். நிகழ்ச்சியில், நகர திமுக பொறுப்பாளர் செல்வம், பொறுப்புக்குழு உறுப்பினர்கள், இளைஞரணி மகளிரணியினர் 14வது வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் ஒன்றியம் தட்டாங்குட்டையில், மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய பொறுப்பாளர் யுவராஜ் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட பொருளாளர் குமார், ராதாகிருஷ்ணன், கார்த்திக்ராஜ், ஊராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு, மத்திய -மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளை கிராம மக்களிடம் விளக்கி கூறி துண்டுபிரசுரங்களை விநியோகித்தனர்.

Tags : meeting ,Village Council ,DMK ,Pallipalayam ,Kumarapalayam ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...