காங்கிரஸ் ஆண்டு விழா'

குமாரபாளையம், டிச.31: காங்கிரஸ் கட்சியின் 136வது ஆண்டு துவக்க விழாவை, குமாரபாளையம் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர். நகர தலைவர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் தனகோபால் நிர்வாகிகள் சிவக்குமார், சிவராஜ், சுப்பிரமணி, சரவணன், கோகுல்நாத், ஜெயக்கொடி, பார்த்தசாரதி, குப்புராஜ், சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கொடியேற்றி  ஊர்வலமாக புறப்பட்ட நிர்வாகிகள், நகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.

Related Stories:

>