உதவி மின்பொறியாளர் அலுவலகம் இடமாற்றம்

போச்சம்பள்ளி மின்வாரிய செயற்பொறியாளர் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) முத்துசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம், போச்சம்பள்ளி கோட்டம், மத்தூர் உபகோட்டத்திற்குட்பட்ட உதவி மின் பொறியாளர் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) அலுவலகம் சந்தூர் கிராமத்தில் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. வரும் ஜனவரி மாதம் 2ம் தேதி முதல் இந்த அலுவலகம், காட்டாகரம் துணை மின் நிலைய வளாகத்தில் சொந்த கட்டிடத்தில் செயல்படும் என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>