மேற்கு மாவட்ட திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம்

தேன்கனிக்கோட்டை, டிச.31:  தளி ஒன்றியத்தில் மருதனப்பள்ளி, அரசகுப்பம், தண்டரை, மல்லசந்திரம் ஆகிய ஊராட்சிகளில், மக்கள் கிராம சபை கூட்டம் மேற்கு மாவட்ட செயலாளர் தளி பிரகாஷ் எம்எல்ஏ தலைமையில் நடந்தது.  கூட்டத்தில் மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, அதிமுக அரசின் அவல நிலையை எடுத்துரைத்து பேசினார். கூட்டத்தில், தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலுரெட்டி, தளி தெற்கு ஒன்றிய செயலாளர் திவாகர், பேரூர் செயலாளர் சீனிவாசன், அவைத்தலைவர்கள் நாகராஜ், கிரிஸ், மாவட்ட கவுன்சிலர் மஞ்சுநாத், ஊராட்சி தலைவர்கள் சுரேகா முனிராஜ், துரைசாமி, ரகு, ஒன்றிய கவுன்சிலர் திம்மராயப்பா மற்றும் கட்சி நிர்வாகிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி ஒன்றியம், பண்ணந்தூரில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி தலைமை வகித்தார். பன்னீர், விக்கி, முத்துகுமார், முனிராஜ், குமார், வள்ளிதுரை, காங்கிரஸ் தலைவர் விஜயன், மதிமுக மகேந்திரன் முன்னிலை வகித்தனர். இதில், முன்னாள் மாவட்ட செயலாளர் சுகவனம், மாநில விவசாய அணி துணை தலைவர் மதியழகன், தட்ரஅள்ளி நாகராஜ், வெற்றிச்செல்வன், புலவர் கிருஷ்ணன், பாபு, சங்கர், தெய்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>