×

தேமுதிக தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம்

கிருஷ்ணகிரி, டிச.31:  கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: ஊத்தங்கரை, பர்கூர் மற்றும் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி தேமுதிக பொறுப்பாளர்களை தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். அதன்படி, ஊத்தங்கரை (தனி) தொகுதி பொறுப்பாளராக பாக்கியராஜ், பர்கூர் பொறுப்பாளராக கோவிந்தராஜ், கிருஷ்ணகிரி பொறுப்பாளராக சின்னராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, வட்டம், ஊராட்சி, கிளை, சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags : Temujin Block Officers ,
× RELATED சீதாராமர் திருக்கல்யாணம்