பெண் தற்கொலை'

மாரண்டஅள்ளி அருகே கோணம்பட்டியை சேர்ந்தவர் முருகன். ஓசூரில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வரும் இவரது மனைவி சத்தியா (24). இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தையும், 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டதால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று மாலை சத்தியா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில், மாரண்டஅள்ளி போலீசார் உடலை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு பிஅனுப்பி வைத்தனர். திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால், இது குறித்து உதவி கலெக்டர் (பொ) தணிகாசலம் விசாரித்து வருகிறார்.

Related Stories:

>