தர்மபுரியில் கூட்டுறவு நகர வங்கி பேரவை கூட்டம்

தர்மபுரி, டிச.31: தர்மபுரி கூட்டுறவு நகர வங்கியின் ஆண்டு பேரவை கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்கு வங்கி தலைவர் எஸ்ஆர் வெற்றிவேல் தலைமை வகித்தார். மேலாண்மை இயக்குனர் பார்த்தசாரதி வரவேற்றார். இயக்குனர்கள் நாகேந்திரன், செந்தில்வேல், சந்திரமோகன், இன்பரசு, கோபால், அமுதவள்ளி, மங்கம்மாள், சேகர் மற்றும் வங்கி அதிகாரிகள் இளங்கோ, ஸ்ரீதர், அமிர்தம், செல்வகுமார், சண்முகம், விஜயன், ரமேஷ், சரவணன், வனிதாமணி, கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வங்கியில் வீட்டு வசதி கடன் 3 லட்சத்தில் இருந்து 30 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். சிறுவணிகக் கடன் 25 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories:

>