×

பென்னாகரம் பிடிஓ ஆபிஸ் முன்பு பாமக சார்பில் மனு அளிக்கும் போராட்டம்

பென்னாகரம், டிச.31: கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி, பாமக சார்பில் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு, மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது. ஒன்றிய சேர்மன் கவிதா ராமகிருஷ்ணன், மாவட்ட தலைவர் செல்வகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர். வன்னியர் இளைஞர் சங்க துணை செயலாளர் சத்தியமூர்த்தி, தொகுதி அமைப்பு செயலாளர் சுதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். முன்னதாக பென்னாகரம் சந்தை தோப்பில் இருந்து கடைவீதி, பஸ் நிலையம் வழியாக கோலாட்டம், கரகாட்டம், காவடி ஆட்டத்தோடு ஊர்வலமாக வந்த பாமகவினர், பென்னாகரம் பிடிஓக்கள் ஆனந்தன், ரேணுகா ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதில் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் முருகன், கதிர்வேல், சேகர், செந்தில், முனுசாமி, முருகேசன், ராஜேந்திரன், ஊராட்சி மன்றத்தலைவர்கள் செந்தில், பிரகாஷ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் செண்பகவல்லி, அருள்மொழி, நகர நிர்வாகிகள் ஜீவா, பாலமுருகன், செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

காரிமங்கலம்: பெரியாம்பட்டியிலிருந்து ஊர்வலமாக வந்து, காரிமங்கலம் ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர், இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி மனு கொடுத்தனர். நிகழ்ச்சியில், வன்னியர் சங்க பாலாஜி, பன்னீர்செல்வம், அன்பு, சத்யா அசோக்குமார், தமிழ்ச்செல்வி, நந்தி சிவம், சஞ்சீவன், முருகேசன், சிலம்பரசன், குமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்டில் இருந்து ஊர்வலமாக சென்ற பாமகவினர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தனர். இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தர்மபுரி: தர்மபுரி மாவட்ட பாமக, வன்னியர் சங்கம் சார்பில், வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கோரி நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடந்தது. மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன் தலைமையில், பாமகவினர் ஊர்வலமாக நல்லம்பள்ளி பஸ் ஸ்டாண்டிலிருந்து, பிடிஓ ஆபிஸ் வந்தனர். பின்னர், பிடிஒவிடம் மனு அளித்தனர். இதில், சாந்தமூர்த்தி, பெரியசாமி, மகேஸ்வரி, மனோகரன், காமராஜ், செந்தில், மாது, ராஜீவ்காந்தி, அறிவு, தயாளன், சிவபிரகாஷ், கிருஷ்ணமூர்த்தி, சக்தி, சிலம்பு, மணி, அன்பு கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதுபோல், தர்மபுரி வட்டாரவளர்ச்சி அலுவலகம் முன், ராமலிங்கம் தலைமையில், முன்னாள் எம்பிக்கள் பாரிமோகன், டாக்டர் செந்தில், நிர்வாகிகள் மாது, சரவணன், வணங்காமுடி, நாகராஜ், சின்னதம்பி, ராஜா, முனுசாமி, தகடூர் தமிழன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காரிமங்கலம், பென்னாகரம், பாலக்கோடு, ஏரியூர், கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், அரூர் ஆகிய 10 பிடிஒ அலுவலகம் முன்  நேற்று மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. இதில் திரளான பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாமகவினர், பாமக மாநில துணை பொதுச்செயலாளர் எஸ்பி வெங்கடேஸ்வரன் தலைமையில் 1000க்கும் மேற்பட்டோர், ஊர்வலமாக சென்று ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.  இதில் மாநில துணை தலைவர் சாந்தமூர்த்தி, மாவட்ட செயலாளர் பெரியசாமி, சண்முகம், அன்பு கார்த்திக் மற்றும் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Pennagaram PDO ,office ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...