மாவட்டத்தில் இன்று புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை

தர்மபுரி, டிச.31: கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தர்மபுரி மாவட்ட கலெக்டர் கார்த்திகா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுபடுத்தவும், தனி மனித சமூக இடைவெளியை பின்பற்றவும், முக கவசம் கட்டாயம் அணிய கடும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டம் -2005ன் படி தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்று (31ம்தேதி) நள்ளிரவு 12 மணி வரையில் தொடர்ந்து நீட்டிப்பு செய்யப்படுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ரெஸ்ட்டாரண்ட், ஹோட்டல்கள், கிளப் ரிசோர்டஸ், சாலைகளில் 2021ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்த 31.12.2020 இரவு மற்றும் 1.1.2021 ஆகிய தேதிகள் தடை விதிக்கப்படுகிறது. விதிமுறைகளை மீறுவோர் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் அல்லது சிறைதண்டனை விதிக்கப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>