பிடிஓ அலுவலகத்தில் பாமகவினர் மனு

வேலூர், டிச.31: வேலூரில் 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி பிடிஓ அலுவலகத்தில் பாமகவினர் நேற்று பிடிஓவிடம் மனு அளித்தனர். தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர் சமூகத்திற்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு பாமகவினர் மனு அளித்து வருகின்றனர். இதைதொடர்ந்து, வேலூர் பிடிஓ அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். நேற்று காலை வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே பாமக சார்பில் பேரணி நடந்தது. இதில் 300க்கும் மேற்பட்ட பாமகவினர் கலந்துகொண்டனர். இந்த பேரணி அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நிறைவடைந்தது.

இதையடுத்து கோரிக்கை தொடர்பான மனுவை பிடிஓவிடம் வழங்க பாமகவினர் அனைவரும் உள்ளே செல்ல முயன்றனர். அவர்களை ஏஎஸ்பி ஆல்பர்ட்ஜான் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பிடிஓ அலுவலகத்தை பாமகவினர் முற்றுகையிட்டனர். அதன் பின்னர் 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து பாமக ஒன்றிய செயலாளர்கள் ஜலகண்டேஸ்வரன், ஜெயமுருகன், துணைசெயலாளர் சரவணன், துணைத்தலைவர் தண்டபாணி ஆகியோர் பிடிஓ கனகவல்லியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Related Stories:

More
>