திருமூர்த்திமலையில் நீச்சல் குளத்தை திறக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை

உடுமலை, டிச. 31:  தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின், சுற்றுலா தலங்கள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. இதனால் திருமூர்த்தி மலைக்கும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இருப்பினும் திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல தடை நீடிக்கிறது. இதனால் அருவியில் தண்ணீர் கொட்டினாலும் குளிக்க முடியாததால் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் ஏமாற்றமடைகின்றனர். மேலும் இங்குள்ள நீச்சல் குளமும் மூடிக்கிடக்கிறது. இதனால் அணையின் நுழைவு வாயிலில் நின்று பொதுமக்கள் அணையை ரசித்து செல்கின்றனர். நீச்சல் குளத்தை மட்டுமாவது உடனடியாக திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>