திருப்பூர், காங்கயத்தில் 20 சதவீத இடஒதுக்கீடு கோரி பா.ம.க. ஆர்ப்பாட்டம்

திருப்பூர், டிச.31:  வன்னியர்களுக்கு  20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி பாட்டாளி மக்கள் கட்சியினர் திருப்பூர்  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில துணைப் பொதுச்செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார்.  தெற்கு மாவட்ட செயலாளர் ஆனந்தன், வடக்கு மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், தெற்கு மாவட்ட தலைவர் மணிகண்ணன், வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேஸ் ஆகியோர்  கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம்  இடஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர். காங்கயம்: பா.ம.க. மாநில செயற்குழு உறுப்பினர் என்.சேகர் தலைமையில், காங்கயம் ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் கொடுத்துள்ள மனுவில், வன்னியர் சமூக மக்களுக்கு தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 20 சதவீத தனி ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, கோரிக்கை மனு அளித்தனர். இதில், பா.ம.க. மாவட்ட துணைத் தலைவர் எஸ்.கே.பழனிச்சாமிக் கவுண்டர், நகரப் பொறுப்பாளர் ராஜ்கண்ணு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>