வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மனித நேய ஜனநாயக கட்சியினர் ரயில் நிலையத்தை முற்றுகை

ஊட்டி, டிச. 31: வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் நேற்று ரயில் நிலைய முற்றுகை போராட்டம் நடந்தது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை வாபஸ் பெறக்ேகாரியும், பஞ்சாப் மற்றும் அரியானா மாவட்டங்களில் இச்சட்டங்களை ஏற்றுக் கொள்ளாத நிலையில், தமிழகத்திலும் இச்சட்டத்திற்கு எதிராக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மனித ேநய ஜனநாயக கட்சி சார்பில் நேற்று ரயில் நிலைய முற்றுகை போராட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் கமாலுதீன் தலைமை வகித்தார். மாநில இளைஞர் அணி துணை செயலாளர் அப்பாஸ், மாநில கொள்கை அணி செயலாளர் நாசர், மாணவரணி மாநில தலைவர் ஜாவித் ஜாபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட 54 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>