×

நீலகிரி மலைப் பூண்டிற்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும்

ஊட்டி, டிச.31:நீலகிரி மாவட்ட உருளைக்கிழங்கு மற்றும் காய்கறி உற்பத்தியாளர்கள் சங்க மகாசபை கூட்டம் ஊட்டியில் நடந்தது. முன்னாள் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். தலைவர் ரங்கசாமி, செயலாளர் பாபு, துணை செயலாளர் கோபால், துணை தலைவர் சுரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், விவசாயத்திற்கு ஜேசிபி வாகனத்தை பயன்படுத்த அரசு அனுமதியளிக்க வேண்டும். நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் பண்ணை குட்டைகள் அதிகளவு அமைக்க அரசு அனுமதி தர வேண்டும்.

வன விலங்குகளின் தொல்லையில் இருந்து விவசாயிகளை காக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வன விலங்குகளால் ஏற்படும் நஷ்டத்திற்கு வழங்கப்படும் இழப்பீடு தொகையை அதிகரிக்க வேண்டும்.  கிராமப்புறங்களில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். நீலகிரி மலைப்பூண்டு மருத்துவ குணம் நிறைந்தது. எனவே, இங்கு உற்பத்தி செய்யப்படும் பூண்டிற்கு புவிசார் குறியீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மாவட்டத்தில் உள்ள அனைத்து தடுப்பணை, நீரோடைகளில் தூர் வார வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சதீஷ், சங்கர் உட்பட விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags : Nilgiris ,
× RELATED குன்னூர் அருகே சிறுத்தை, கரடி வீடு...