×

சின்ன வெங்காயத்தில் பூச்சி, நோய் தாக்குதலால் விலை அதிகரிக்கும்

கோவை,  டிச. 31 : பூச்சி, நோய் தாக்குதல் காரணமாக சின்ன வெங்காயத்தின் விலையில் தாகத்தை ஏற்படுத்தும் என வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில் சின்ன வெங்காயம் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்களில் பெருமளவு பயிரிடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், நாமக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது.

வைகாசி, புரட்டாசி மற்றும் தை பட்டங்களில் சின்ன வெங்காயமானது பயிரிடப்பட்டு சமீப காலமாக கார்த்திகை பட்டத்திலும் பயிரிடப்படுவதால் ஆண்டு முழுவதும் சந்தைக்கு வெங்காய வரத்து உள்ளது. இந்நிலையில், புரட்டாசி, கார்த்திகை பட்டங்களில் பெரம்பலூர், துறையூர் மற்றும் கள்ளக்குறிச்சி போன்ற பகுதிகளில் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயமானது பூச்சி மற்றும் நோய் தாக்குதல் காரணமாக உற்பத்தி மற்றும் தரம் குன்றி காணப்படுகிறது.

தொடர்ச்சியான மழை மற்றும் ஏதுவான காலநிலையின் காரணமாக இந்த தாக்கங்கள் முக்கிய வெங்காயம் பயிரிடப்படும் பகுதிகளில் சுமார் 9 ஆயிரம் எக்டர் பரப்பில் காணப்படுவதாக வர்த்தக மூலகங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத்திட்டம், கடந்த 10 ஆண்டுகளாக திண்டுக்கல் சந்தையில் நிலவிய சின்ன வெங்காயத்தின் விலை மற்றும் சின்ன வெங்காயம் பயிரிடப்படும் முக்கிய பகுதிகளில் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.  விலை மற்றும் சந்தை ஆய்வுகளின்படி நல்ல தரமான சின்ன வெங்காயத்தின் பண்ணை விலை வரும் காலங்களில் கிலோவிற்கு ரூ.50 மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை உயர்வு புதிய அறுவடை வரும் காலமாகிய மார்ச் 21-ம் தேதி வரை நீடிக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...