பைக் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

கோவை, டிச.31: கோவையில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோவை அடுத்த காரமடை குட்டையூரை சேர்ந்தவர் வேலுசாமி மகன் விஜயபிரஸ்தா (28). ஐடி ஊழியர். இவர் தனது பைக்கை சம்பவத்தன்று வீட்டு முன்பு நிறுத்தியிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் பைக்கை திருட முயற்சி செய்து கொண்டிருந்தார். இதனைப்பார்த்த விஜயபிரஸ்தா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை பிடித்து காரமடை போலீசில் ஒப்படைத்தார்.

விசாரணையில், அந்த வாலிபர் கவுண்டம்பாளையம் பாலாஜி நகரை சேர்ந்த சிவப்பிரகாஷ் (31) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். அவர் மீது நெகமம், துடியலூர் காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கோவை சிங்காநல்லூர் கமலா மில் குட்டை தெருவை சேர்ந்தவர் முகில் (24). தனியார் நிறுவன ஊழியர்.

இவர் நேற்று முன்தினம் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஒரு பேக்கரி முன்பு தனது பைக்கை நிறுத்தி விட்டு சிறிது நேரத்தில் திரும்பி வந்தார். அப்போது ஒரு ஆசாமி பைக்கை திருடுவதற்கு முயன்று கொண்டிருந்தார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த முகில் அந்த ஆசாமியை பிடித்து சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில், அவர் நீலிகோணாம்பாளையத்தை சேர்ந்த சவுந்தர்ராஜன் (30) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

Related Stories:

>